×

சிஐடியு சங்கம் சார்பில் சாதனை மாணவர்களுக்கு பரிசு

 

ராஜபாளையம், ஜூன் 15: ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் சிஐடியு கார், வேன் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் சங்க உறுப்பினர் குடும்பத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ராஷியாம் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

சிஐடியு டாக்ஸி சங்கத் தலைவர் தங்கவேல், சிஐடியு டாக்ஸி சங்க செயலாளர் கண்ணன், மாவட்ட செயலாளர் தேவா, மாவட்டத் தலைவர் மகாலட்சுமி, சாலைப் போக்குவரத்து மாவட்ட செயலாளர் திருமலை, மாவட்டத் துணைத் தலைவர் கணேசன், கன்வீனர் சுப்பிரமணியன், டாக்ஸி சங்கத் துணைத் தலைவர் விஜயகுமார், டாக்ஸி சங்க பொருளாளர் ஐயப்பன் மற்றும் நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post சிஐடியு சங்கம் சார்பில் சாதனை மாணவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : CITU Association ,Rajapalayam ,CITU Car ,Van Drivers Association ,Jawakar Maidan ,Dinakaran ,
× RELATED ராஜபாளையம் பகுதியில் தென்னை மரங்களில் நோய் தாக்குதல்